திருமணப் பொருத்தம் (Thirumana Porutham)

இல்லறம் என்பது கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களைப் பங்கிட்டுத் தம் சந்ததிகளான குழந்தைச் செல்வத்தைப் பேணிக்காத்து கணவன், மனைவி, குழந்தை மூவரும் சமூகக் கடமையைப் பின்பற்றுவது ஆகும். திருமணம் செய்து இல்லறம் நடத்துவது இன்பத்திற்காக மட்டும் அன்று. இன்ப துன்ப உணர்வுகளையும் மற்ற மனநிலைகளையும் மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறத்தில் இடமில்லை.
                               "அன்பே இல்லறத்தின் பண்பு" 
என்றார் வள்ளுவர்.
தொல்காப்பியத்தில் இல்லற வாழ்வில் இணையும் ஒரு கணவன், மனைவியின் இடையே என்னென்ன பொருத்தங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

         "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு 
           உருவு, நிறுத்த காமவாயில் 
           நிறையே, அருளே, உணர்வோடுதிருவென 
           முறையுரைக் கிளந்த ஒப்பினது வசையே"            (தொல் .பொருள் 273)

1. பிறப்பு                       -        பெருமை குடியிலே பிறத்தல்.(அ )தம் தகுதிக்கு  
                                                  குறையாத  குடிப்பிறப்பு உள்ளவர்களுடன்      
                                                   திருமண  உறவு கொள்ளல்     
2. குடிமை                    -        பிறந்த குடியினது ஒழுக்கங்களினின்றும்    
                                                   வழுவாமை.
3. ஆண்மை                -        முயற்சியோடு செயற்படும் ஊக்கத்தைக் குறிக்கும்.
4. ஆண்டு                     -        ஆண் எப்போதும் பெண்ணை விட பெரியவனாக 
                                                   இருத்தல். 
5. உருவம்                    -        இருவரின் உடல் அமைப்பும் பொருத்தமாக 
                                                   அமைதல்.   
6. நிறுத்தகாமவாயில் - இன்பம் நுகர்வதற்கு வேண்டிய உணர்வும், 
                                                    சக்தியும், அன்பும் இருவரிடமும் சமமாக 
                                                    இருத்தல். 
7. நிறப்பொருத்தம்  -         இருவரும் தம் குடும்ப செய்திகளை 
                                                    போற்றிக்காத்தல்.
8. அருள்                        -         இருவரும் எல்லா உயிரிடமும் அன்பு 
                                                    கொண்டவர்களாக இருத்தல்.  
9. உணர்வு                   -          கணவன், மனைவி இருவரும் ஒத்த உணர்வு 
                                                   உள்ளவர்களாக இருத்தல். 
10. திருப்பொருத்தம் -       இருவருவே சம குடும்பத்தவராக இருத்தல் 
                                                   சிறந்தது. 

பொருந்தாத  பத்தும் சொல்லப்பட்டுள்ளது.

1. நிம்புரி                       -        தற்பெருமை கூடாது 
2. கொடுமை               -        தீங்கு செய்கின்ற மனப்பான்மை கூடாது.
3. வியப்பு                      -        தம்மை வியத்தல் கூடாது 
4. புறமொழி                -        புறம் பேசுதல் கூடாது.
5. வன்சொல்              -        கடிந்து பேசுதல் கூடாது.
6. பொச்சாப்பு             -        தளர்ச்சி அடைதல் கூடாது. 
7. குடிமை                     -        கணவனோ,மனைவியோ தன் குடிப்பிறப்பை 
                                                    உயர்த்திப் பேசுதல் கூடாது.
8. ஏழைமை                -        வருவாய்க்கு ஏற்ப வாழுதல்.
9. மறதி கூடாது.
10. ஒப்புமை                -        கணவனோ,மனைவியோ ஒருவரையொருவர் 
                                                    மற்றவரோடு ஒப்பிட்டு பேசுதல் கூடாது.

இதில் எத்தனை பொருத்தங்கள் உள்ளது, எத்தனை பொருத்தங்கள் இல்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். 
ஒரு கட்டத்தினுள் உங்களின் வாழ்க்கையை அடைத்து விடாதீர்கள்.கட்டம் பார்த்து கை பிடித்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்குமென்றால்,  கட்டம் பார்த்தவர்களின் கைகள் சேர்ந்து தான் இருக்கிறதா?  சந்தோஷமாக தான் இருக்கிறதா?  மேற்கூறிய 10 பொருத்தங்களைத் தான் இக்காலத்திற்கு ஏற்றார் போல் ஜாதகம் என மாற்றி விட்டார்கள்.
              
                      மனப் பொருத்தம் ஒன்றே மணத்திற்கு முக்கியமானது.
 
                                                     இல்லறம் சிறக்கட்டும்.





Share:

புதிய உதயம் (Puthiya Udhayam)

தினமும் சூரியன் மட்டும்
உதிக்கும் நம் நாட்டில்
புதிய உதயம் எப்போது?
பெண்களுக்கு ஆபத்தில்லா
பாதுகாப்பு அமைந்தால்

வாரம் ஒரு முறையாவது
பசுவின் காம்பிற்கு விடுமுறை
 கிடைத்தால்

முகத்தில் கள்ளத்தனம் இல்லா
புன்னகை இருந்தால்

சுட்டெரிக்காத சூரியன்
உதித்தாள்

வியர்வையில் முத்தெடுக்கும்
ஏழையின் வறுமை
ஒழிந்தால்

இரு நரையிலும்
வேலையில்லா
திண்டாட்டம் ஒழிந்தால்

இயற்கையின் கண்ணீரில்
செயற்கை கட்டடம் கட்டி
பசுமையை பாழாக்கும்
வேலை முடிந்தால்

அரசியல்வாதிகளின்
ஆதிக்கம் ஒழிந்தால்

குடிக்க நீரே இல்லாமல்
தவிக்கும் மக்களிடையில்
குடித்து
குடியைக்  கெடுக்கும்
அவலம் மாறினால்

புத்தகம் தூக்கும் கையில்
கல் தூக்கும்
குழந்தைகளின்
வேலை நிறுத்தப்பட்டால்

வயிற்றை நிரப்ப
பிச்சை எடுக்கும்
அவலம் மாறினால்

மதம், இனம், மொழி
வேறுபாட்டை மறந்து
அனைவரும்
மனிதன் என்ற
எண்ணம் பிறந்தால்

விரிசல் இல்லா
உறவுகள் இருந்தால்

ஒவ்வொரு நாளும்  புதிய உதயமாக இருக்கும்...



                                                                                                                    - ரேணுகா 

 
Share:

மாதவிடாய் பிரச்சனைகள் தீர (Periods Problem)

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் தீர இதை கடைபிடித்தாலே போதும்.

         தலை முடி :  இன்றைய பெண்கள் தலை  முடியை விதவிதமாக  வாரிக்கொள்கிறார்கள். மூக்குக்கு நேராக நடு நெற்றி வழியாக தலையில் வகுடு எடுத்து சீவ வேண்டும். அப்படி செய்வதால் நம் கர்ப்பப்பையின் இயக்கம் சீராக இருக்கும்.
    

         தூங்கும் முறை :  சில பெண்கள் தூங்கும் போது கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து பின்னிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி பின்னிக்கொண்டு தூங்குவதால் கர்ப்பப்பை சுருங்குகிறது. இடது பக்கம் ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி காரணமாக பெண்கள் குப்புறப்படுத்து தூங்குவார்கள். கண்டிப்பாக குப்புறப்படுத்து தூங்க கூடாது.

        மாத்திரை : அய்யய்யோ! நல்ல நாளில் தீட்டு வந்துட போகுது. அதனால் மாதவிடாய் தள்ளி போவதற்கோ அல்லது முன்கூட்டியே வருவதற்கோ சில பெண்கள் மாத்திரையை உட்கொள்வதை வழக்கமாகிவிட்டார்கள். ரத்தம் வெளியேறுவதை தீட்டு என்று சொன்னால், நாம் ஒவ்வொருவரும் தீட்டோடு பிறந்தவர்கள் தான்.  எந்த நாளாக இருந்தாலும் சரி. அசுத்த ரத்தம் வெளியேறுவது தான் மாதவிடாய். இது இயற்கையான ஒன்று என்று புரிந்துக்கொண்டு இது போன்ற மாத்திரைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

         உட்காரும் முறை : ஒரு பெண் நீ . உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா கால் மேல் கால் போட்டு உட்காருவ என்ற காலம் சென்று இன்று பெண்களும் கால் மேல் கால் போட்டு உட்காரலாம் என்ற நிலை வந்துவிட்டது. கால் மேல் கால் போட்டு உட்காருவது அவளின் அடக்கத்தை குறிப்பது இல்லை. அவள் அவ்வாறு உட்காருவதால் அவளின் கர்ப்பப்பை சுருங்குகிறது என்ற காரணத்தாலேயே, பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சொல்லி வைத்தார்கள். 

நம் முன்னோர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. இதை கடைப்பிடித்து வந்தால் உங்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

Share:

நாவினை அடக்குவோம் (Naavinai Adakkuvom)

நான்கு துறவிகளுக்குள் நடந்த போட்டி பற்றிய கதையை கேட்டிருக்கிறீர்களா?      
        காலை முதல் நள்ளிரவு வரை யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்க வேண்டும் என்பது தான் போட்டி. எழுந்து எங்காவது போனால் யாரையாவது பார்க்க நேரிட்டு, எதையாவது சொல்ல நேர்ந்து விடும் என்பதால் யாரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. நேரம் நகர்ந்தது. மாலை வந்தது. இரவு நெருங்கியது. நால்வரில் ஒருவர் நடுவே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியைப் பார்த்தார். சில நிமிடங்களில் தீர்ந்து அணைந்து விடும் போலிருந்தது. "வேற மெழுகுவர்த்தி இருக்க?" என்று தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார். அருகில் இருந்தவருக்கு வந்த எரிச்சலில், "இப்போ இதுவா பெரிய விஷயம்?" என்று சொல்லிவிட்டார். பேசிவிட்டதால் போட்டியில் இவ்விருவரும் தோற்றுவிட்டனர்.

      மூன்றாமர்  இந்த இருவரையும் பார்த்தார். "அவன் தான் தெரியாம மெழுகுவர்த்தி இருக்கானு கேட்டுட்டான். அதுக்காக நீஉம் பதில் பேசணுமா?" என்று கேட்டு அவரும் தோற்றுப்போனார். நான்காவது துறவி சத்தம் போட்டு சிரித்தார். "நீங்க மூணு பேரும் பேசிட்டிங்கா. நான் ஒருத்தன் தான் பேசவில்லை" என்று மகிழ்ச்சியில் கத்தினார். அவரும் தோற்றுப் போனார்.

      சிறிது நேரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனம் காப்பது துறவிகளுக்கே முடியவில்லை என்றால்........

      தேவையான நேரங்களில் மட்டும் வாயை திறந்து மீதி நேரங்களில் அதனை மூடியே வைத்திருப்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது.

      அளவுக்கு அதிகமாய் உண்டு, ஆபத்தான சமாச்சாரங்களை எல்லாம் உள்ளே கொண்டு போனால் உடல் நலம் கெடும். அளவுக்கு அதிகமாக பேசி,  ஆபத்தான சமாச்சாரங்களை எல்லாம் வெளியே கொட்டினால் உ ள்ளநலம் கெடும். 

     அதனால் தான் அவ்வப்போது உண்ணாமல் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. அது போல அவ்வப்போது எதையுமே பேசாமல் மௌன விரதம் இருப்பது உள்ளநலத்திற்கு நல்லது. 

(மௌன விரதமா ? அய்யய்யோ ! ரொம்ப கஷ்டமாச்சே, சாப்பிடாமக் கூட இருந்திடலாம். ஒரு வார்த்தை பேசாம எப்படிங்க இருக்கிறது? பைத்தியம் பிடிச்சிடாதா? )
                                              அது நல்ல வைத்தியம்.
     
Share:

HAND CREATIVE






Share:

VAAZHKAI

வாழ்க்கை என்பது போராட்டமே .
ஏற்றமோ , இரக்கமோ
இரண்டையும் ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை .
இவ்வுலகில் ஏதும் நிரந்திரம்  இல்லை,
உன் ஏற்றமும், இரக்கமும் கூட.
வாழ்! பிறரையும் வாழ வை !Image result for vazhkai thathuvam in tamil
Share:

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages