திருமணப் பொருத்தம் (Thirumana Porutham)

இல்லறம் என்பது கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களைப் பங்கிட்டுத் தம் சந்ததிகளான குழந்தைச் செல்வத்தைப் பேணிக்காத்து கணவன், மனைவி, குழந்தை மூவரும் சமூகக் கடமையைப் பின்பற்றுவது ஆகும். திருமணம் செய்து இல்லறம் நடத்துவது இன்பத்திற்காக மட்டும் அன்று. இன்ப துன்ப உணர்வுகளையும் மற்ற மனநிலைகளையும் மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இல்லறத்தில் இடமில்லை.
                               "அன்பே இல்லறத்தின் பண்பு" 
என்றார் வள்ளுவர்.
தொல்காப்பியத்தில் இல்லற வாழ்வில் இணையும் ஒரு கணவன், மனைவியின் இடையே என்னென்ன பொருத்தங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

         "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு 
           உருவு, நிறுத்த காமவாயில் 
           நிறையே, அருளே, உணர்வோடுதிருவென 
           முறையுரைக் கிளந்த ஒப்பினது வசையே"            (தொல் .பொருள் 273)

1. பிறப்பு                       -        பெருமை குடியிலே பிறத்தல்.(அ )தம் தகுதிக்கு  
                                                  குறையாத  குடிப்பிறப்பு உள்ளவர்களுடன்      
                                                   திருமண  உறவு கொள்ளல்     
2. குடிமை                    -        பிறந்த குடியினது ஒழுக்கங்களினின்றும்    
                                                   வழுவாமை.
3. ஆண்மை                -        முயற்சியோடு செயற்படும் ஊக்கத்தைக் குறிக்கும்.
4. ஆண்டு                     -        ஆண் எப்போதும் பெண்ணை விட பெரியவனாக 
                                                   இருத்தல். 
5. உருவம்                    -        இருவரின் உடல் அமைப்பும் பொருத்தமாக 
                                                   அமைதல்.   
6. நிறுத்தகாமவாயில் - இன்பம் நுகர்வதற்கு வேண்டிய உணர்வும், 
                                                    சக்தியும், அன்பும் இருவரிடமும் சமமாக 
                                                    இருத்தல். 
7. நிறப்பொருத்தம்  -         இருவரும் தம் குடும்ப செய்திகளை 
                                                    போற்றிக்காத்தல்.
8. அருள்                        -         இருவரும் எல்லா உயிரிடமும் அன்பு 
                                                    கொண்டவர்களாக இருத்தல்.  
9. உணர்வு                   -          கணவன், மனைவி இருவரும் ஒத்த உணர்வு 
                                                   உள்ளவர்களாக இருத்தல். 
10. திருப்பொருத்தம் -       இருவருவே சம குடும்பத்தவராக இருத்தல் 
                                                   சிறந்தது. 

பொருந்தாத  பத்தும் சொல்லப்பட்டுள்ளது.

1. நிம்புரி                       -        தற்பெருமை கூடாது 
2. கொடுமை               -        தீங்கு செய்கின்ற மனப்பான்மை கூடாது.
3. வியப்பு                      -        தம்மை வியத்தல் கூடாது 
4. புறமொழி                -        புறம் பேசுதல் கூடாது.
5. வன்சொல்              -        கடிந்து பேசுதல் கூடாது.
6. பொச்சாப்பு             -        தளர்ச்சி அடைதல் கூடாது. 
7. குடிமை                     -        கணவனோ,மனைவியோ தன் குடிப்பிறப்பை 
                                                    உயர்த்திப் பேசுதல் கூடாது.
8. ஏழைமை                -        வருவாய்க்கு ஏற்ப வாழுதல்.
9. மறதி கூடாது.
10. ஒப்புமை                -        கணவனோ,மனைவியோ ஒருவரையொருவர் 
                                                    மற்றவரோடு ஒப்பிட்டு பேசுதல் கூடாது.

இதில் எத்தனை பொருத்தங்கள் உள்ளது, எத்தனை பொருத்தங்கள் இல்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். 
ஒரு கட்டத்தினுள் உங்களின் வாழ்க்கையை அடைத்து விடாதீர்கள்.கட்டம் பார்த்து கை பிடித்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்குமென்றால்,  கட்டம் பார்த்தவர்களின் கைகள் சேர்ந்து தான் இருக்கிறதா?  சந்தோஷமாக தான் இருக்கிறதா?  மேற்கூறிய 10 பொருத்தங்களைத் தான் இக்காலத்திற்கு ஏற்றார் போல் ஜாதகம் என மாற்றி விட்டார்கள்.
              
                      மனப் பொருத்தம் ஒன்றே மணத்திற்கு முக்கியமானது.
 
                                                     இல்லறம் சிறக்கட்டும்.





Share:

1 comment:

  1. Thanks for sharing this amazing piece of content. Using our Thirumana Porutham calculator you can find out the number of matching poruthams.

    ReplyDelete

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages