புதிய உதயம் (Puthiya Udhayam)

தினமும் சூரியன் மட்டும்
உதிக்கும் நம் நாட்டில்
புதிய உதயம் எப்போது?
பெண்களுக்கு ஆபத்தில்லா
பாதுகாப்பு அமைந்தால்

வாரம் ஒரு முறையாவது
பசுவின் காம்பிற்கு விடுமுறை
 கிடைத்தால்

முகத்தில் கள்ளத்தனம் இல்லா
புன்னகை இருந்தால்

சுட்டெரிக்காத சூரியன்
உதித்தாள்

வியர்வையில் முத்தெடுக்கும்
ஏழையின் வறுமை
ஒழிந்தால்

இரு நரையிலும்
வேலையில்லா
திண்டாட்டம் ஒழிந்தால்

இயற்கையின் கண்ணீரில்
செயற்கை கட்டடம் கட்டி
பசுமையை பாழாக்கும்
வேலை முடிந்தால்

அரசியல்வாதிகளின்
ஆதிக்கம் ஒழிந்தால்

குடிக்க நீரே இல்லாமல்
தவிக்கும் மக்களிடையில்
குடித்து
குடியைக்  கெடுக்கும்
அவலம் மாறினால்

புத்தகம் தூக்கும் கையில்
கல் தூக்கும்
குழந்தைகளின்
வேலை நிறுத்தப்பட்டால்

வயிற்றை நிரப்ப
பிச்சை எடுக்கும்
அவலம் மாறினால்

மதம், இனம், மொழி
வேறுபாட்டை மறந்து
அனைவரும்
மனிதன் என்ற
எண்ணம் பிறந்தால்

விரிசல் இல்லா
உறவுகள் இருந்தால்

ஒவ்வொரு நாளும்  புதிய உதயமாக இருக்கும்...



                                                                                                                    - ரேணுகா 

 
Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages