நாவினை அடக்குவோம் (Naavinai Adakkuvom)

நான்கு துறவிகளுக்குள் நடந்த போட்டி பற்றிய கதையை கேட்டிருக்கிறீர்களா?      
        காலை முதல் நள்ளிரவு வரை யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்க வேண்டும் என்பது தான் போட்டி. எழுந்து எங்காவது போனால் யாரையாவது பார்க்க நேரிட்டு, எதையாவது சொல்ல நேர்ந்து விடும் என்பதால் யாரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. நேரம் நகர்ந்தது. மாலை வந்தது. இரவு நெருங்கியது. நால்வரில் ஒருவர் நடுவே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியைப் பார்த்தார். சில நிமிடங்களில் தீர்ந்து அணைந்து விடும் போலிருந்தது. "வேற மெழுகுவர்த்தி இருக்க?" என்று தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார். அருகில் இருந்தவருக்கு வந்த எரிச்சலில், "இப்போ இதுவா பெரிய விஷயம்?" என்று சொல்லிவிட்டார். பேசிவிட்டதால் போட்டியில் இவ்விருவரும் தோற்றுவிட்டனர்.

      மூன்றாமர்  இந்த இருவரையும் பார்த்தார். "அவன் தான் தெரியாம மெழுகுவர்த்தி இருக்கானு கேட்டுட்டான். அதுக்காக நீஉம் பதில் பேசணுமா?" என்று கேட்டு அவரும் தோற்றுப்போனார். நான்காவது துறவி சத்தம் போட்டு சிரித்தார். "நீங்க மூணு பேரும் பேசிட்டிங்கா. நான் ஒருத்தன் தான் பேசவில்லை" என்று மகிழ்ச்சியில் கத்தினார். அவரும் தோற்றுப் போனார்.

      சிறிது நேரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனம் காப்பது துறவிகளுக்கே முடியவில்லை என்றால்........

      தேவையான நேரங்களில் மட்டும் வாயை திறந்து மீதி நேரங்களில் அதனை மூடியே வைத்திருப்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது.

      அளவுக்கு அதிகமாய் உண்டு, ஆபத்தான சமாச்சாரங்களை எல்லாம் உள்ளே கொண்டு போனால் உடல் நலம் கெடும். அளவுக்கு அதிகமாக பேசி,  ஆபத்தான சமாச்சாரங்களை எல்லாம் வெளியே கொட்டினால் உ ள்ளநலம் கெடும். 

     அதனால் தான் அவ்வப்போது உண்ணாமல் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. அது போல அவ்வப்போது எதையுமே பேசாமல் மௌன விரதம் இருப்பது உள்ளநலத்திற்கு நல்லது. 

(மௌன விரதமா ? அய்யய்யோ ! ரொம்ப கஷ்டமாச்சே, சாப்பிடாமக் கூட இருந்திடலாம். ஒரு வார்த்தை பேசாம எப்படிங்க இருக்கிறது? பைத்தியம் பிடிச்சிடாதா? )
                                              அது நல்ல வைத்தியம்.
     
Share:

No comments:

Post a Comment

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages