நாம் நம்மோடு சில வேளைகளில் மட்டும் தங்க வேண்டும்.
சில வேளைகளில் நாம் நம்மிடமிருந்து தப்பிக்க வேண்டும்.
"தனிமை தற்கொலைக்கும் தூண்டும்" என்பது பலரும் அறிந்த ஒன்றே. பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கட்டும் என்று பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்களுக்கு தனியறை அமைத்து கொடுப்பது தான். ஆண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், பெண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், தூங்குவதற்கும் மட்டும் போதுமானது தனியறை. படிக்கும் பிள்ளைகளுக்கு கைபேசி தேவையானது அல்ல. அவசியமும் இல்லை. படிக்க போகிறேன் என்ற பெயரில் கைபேசியை நோண்டுவதும், கணினியில் படம் பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். பெற்றோர்களிடமும் பேசுவதில்லை, வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் பேசுவதில்லை. முழுநேரமும் கைபேசியுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் தான்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் காலம் சென்று இப்போது கைபேசியில் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தீபாவளி என்றால் என்னவென்றே தெரியவில்லை. பல் தேய்க்காமல் பத்து மணி வரை படுக்கை தான். ஒரு முறை என் அப்பாவுடன் பட்டாசு வாங்க கடைக்கு சென்றிருந்தேன். என்ன அண்ணே பட்டாசு விற்பனை ஆகலையா என்றேன். இந்த கைபேசி வந்ததிலிருந்து எங்களோட தொழில் உட்கார்ந்து போச்சுமா. யாருமா இப்போ பட்டாசுலாம் வாங்கறாங்க? சில பேர் தான்மா வாங்கராங்க. எப்படி பார்த்தாலும் நஷ்டம் தான் என்ற அந்த வியாபாரியின் புலம்பல்கள் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்க நேரம் சொல்லிவிட்டார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. அந்த நேரத்திலும் கைபேசியுடன் உரையாடிக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம்.
"காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு"
என்ற பாரதியாரின் பாடலை இக்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்தால்
"காலை எழுந்தவுடன் கைபேசி
மாலை முழுவதும் கைபேசி"
என்று தான் சொல்ல வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள், உறவு முறைகள், ஓடி ஆடும் விளையாட்டுகள், பாரம்பரிய வழக்கங்கள் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறது கைபேசி. பள்ளி பருவத்தை முடிக்கும் வரையிலாவது கைபேசியை கொடுக்காமல் வேண்டும். நான் ஒரு புத்தகத்தில் படித்த உண்மை சம்பவத்தை மீண்டும் உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.
ஒரு தம்பதியினருக்கு ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் தவமிருந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். ஒரேயொரு பிள்ளையோடு நிறுத்திக்கொண்டார்கள். ஆண்டுகள் பல கடந்து பிறந்ததால் அடிக்காமல், திட்டாமல் செல்லம் காட்டியே வளர்த்து வந்தார்கள். பையனுக்கு பத்து வயது வந்தது. தனியறை கொடுத்துவிடுவோம் என முடிவு செய்து தனியறை கொடுத்தார்கள். அச்சிறுவனுக்கு கூடவே மடிக்கணினியும் வாங்கி கொடுத்தார்கள். முடிந்தது அவன் உறவு. அந்த அறையே கதி என கிடந்தான். அவன் படிக்கிறான் என்று பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. பின்பு தான் தெரியவந்தது அவன் ஆபாச படங்களை பார்க்கிறான் என்று. அவனிடமிருந்து மடிக்கணினியை பிடிங்கி வைத்தார்கள். அப்போதும் அவன் அடங்கவில்லை. "ADDICTION" என்ற வியாதிக்கு ஆளாகினான். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறான். பெற்றோர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை தான் பாதிக்கும். இதுபோல் பல பேர் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மனநல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோயைப் பற்றி சில தகவல்கள் தெரிவித்திருந்தார்கள். அவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் 60% மக்கள் ADDICT என்றே நோய்க்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான். அதிலும் இளைஞர்களே அதிகம் என்றார்கள். அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கு அவர்கள் மருத்துவமனையில் தங்கி தான் சிகிச்சை பெறமுடியும். அதுவரை அவர்கள் எங்கும் போகமுடியாது என்றும் தெரிவித்திருந்தார்கள். பெண் பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்.
தனியறை கொடுப்பதாலோ, கைபேசி, கணினி கொடுப்பதாலோ தவறு வருவதில்லை. பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மேல் கண்காணிப்பும், கண்டிப்பும் குறையும் போது தான் தவறு ஏற்படுகிறது.
பிள்ளைகளை வீட்டிலும் கண்டிக்க கூடாது, பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிக்க கூடாது என்றால் அவர்கள் எங்கு தான் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள்? ஆண் பிள்ளையாக இருந்தாலும், பெண் பிள்ளையாக இருந்தாலும் கண்காணிப்பும், கண்டிப்பும் மிகவும் அவசிமானது.
***********************************************
"தனிமையின் பிள்ளைகளாக மாற்றாமல் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து உறவுகளோடும் வாழ கற்றுக்கொடுங்கள்"
***********************************************
சில வேளைகளில் நாம் நம்மிடமிருந்து தப்பிக்க வேண்டும்.
"தனிமை தற்கொலைக்கும் தூண்டும்" என்பது பலரும் அறிந்த ஒன்றே. பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கட்டும் என்று பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்களுக்கு தனியறை அமைத்து கொடுப்பது தான். ஆண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், பெண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், தூங்குவதற்கும் மட்டும் போதுமானது தனியறை. படிக்கும் பிள்ளைகளுக்கு கைபேசி தேவையானது அல்ல. அவசியமும் இல்லை. படிக்க போகிறேன் என்ற பெயரில் கைபேசியை நோண்டுவதும், கணினியில் படம் பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். பெற்றோர்களிடமும் பேசுவதில்லை, வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் பேசுவதில்லை. முழுநேரமும் கைபேசியுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் தான்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் காலம் சென்று இப்போது கைபேசியில் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தீபாவளி என்றால் என்னவென்றே தெரியவில்லை. பல் தேய்க்காமல் பத்து மணி வரை படுக்கை தான். ஒரு முறை என் அப்பாவுடன் பட்டாசு வாங்க கடைக்கு சென்றிருந்தேன். என்ன அண்ணே பட்டாசு விற்பனை ஆகலையா என்றேன். இந்த கைபேசி வந்ததிலிருந்து எங்களோட தொழில் உட்கார்ந்து போச்சுமா. யாருமா இப்போ பட்டாசுலாம் வாங்கறாங்க? சில பேர் தான்மா வாங்கராங்க. எப்படி பார்த்தாலும் நஷ்டம் தான் என்ற அந்த வியாபாரியின் புலம்பல்கள் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்க நேரம் சொல்லிவிட்டார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. அந்த நேரத்திலும் கைபேசியுடன் உரையாடிக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம்.
"காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு"
என்ற பாரதியாரின் பாடலை இக்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்தால்
"காலை எழுந்தவுடன் கைபேசி
மாலை முழுவதும் கைபேசி"
என்று தான் சொல்ல வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள், உறவு முறைகள், ஓடி ஆடும் விளையாட்டுகள், பாரம்பரிய வழக்கங்கள் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறது கைபேசி. பள்ளி பருவத்தை முடிக்கும் வரையிலாவது கைபேசியை கொடுக்காமல் வேண்டும். நான் ஒரு புத்தகத்தில் படித்த உண்மை சம்பவத்தை மீண்டும் உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மனநல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோயைப் பற்றி சில தகவல்கள் தெரிவித்திருந்தார்கள். அவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் 60% மக்கள் ADDICT என்றே நோய்க்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான். அதிலும் இளைஞர்களே அதிகம் என்றார்கள். அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கு அவர்கள் மருத்துவமனையில் தங்கி தான் சிகிச்சை பெறமுடியும். அதுவரை அவர்கள் எங்கும் போகமுடியாது என்றும் தெரிவித்திருந்தார்கள். பெண் பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்.
தனியறை கொடுப்பதாலோ, கைபேசி, கணினி கொடுப்பதாலோ தவறு வருவதில்லை. பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மேல் கண்காணிப்பும், கண்டிப்பும் குறையும் போது தான் தவறு ஏற்படுகிறது.
பிள்ளைகளை வீட்டிலும் கண்டிக்க கூடாது, பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிக்க கூடாது என்றால் அவர்கள் எங்கு தான் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள்? ஆண் பிள்ளையாக இருந்தாலும், பெண் பிள்ளையாக இருந்தாலும் கண்காணிப்பும், கண்டிப்பும் மிகவும் அவசிமானது.
***********************************************
"தனிமையின் பிள்ளைகளாக மாற்றாமல் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து உறவுகளோடும் வாழ கற்றுக்கொடுங்கள்"
***********************************************
No comments:
Post a Comment